தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வரலாறு படைக்க வேண்டும்: உதயநிதி அட்வைஸ்

 வரலாறு படைக்க வேண்டும்: உதயநிதி அட்வைஸ்

 வரலாறு படைக்க வேண்டும்: உதயநிதி அட்வைஸ்


ADDED : மார் 12, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 04:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி:'234 தொகுதி நமது இலக்கு; அதில், 200 தொகுதியில் நாம் வெற்றி பெற்று வரலாறு படைக்க வேண்டும்' என திட்டக்குடியில் நடந்த சார்பு அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

கடலுார் மாவட்டம், திட்டக்குடியில் நடந்த கூட்டத்திற்கு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, துணை முதல்வர் உதயநிதி பங்கேற்றார்.

அவர் அங்கு பேசியதாவது:

வரும் 2026 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் நாம் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும். 234 தொகுதி நமது இலக்கு; அதில், 200 தொகுதியில் நாம் வெற்றி பெற்று வரலாறு படைக்க வேண்டும். அரசின் திட்டங்களை பொது மக்களிடம் எடுத்துரைத்து, ஓட்டு சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு நிர்வாகியும் திண்ணை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இதனை நான் கண்காணிப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, உதயநிதி வதிஷ்டபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞர் நுாலகத்தை திறந்து வைத்தார். முன்னதாக, திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில், ஸ்டாலின் 73வது பிறந்தநாளையொட்டி, 73 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us