UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 03:22 PM

மந்தாரக்குப்பம்: வீடு புகுந்து நகைகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
ஊமங்கலம் அடுத்த முதனை கிழக்கு தெருவை சேர்ந்த விஜயக்குமார் மனைவி வனிதா. இவர்களது வீட்டில் சில மாதங்களுக்கு முன் பீரோவை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் திருடு போனது.
இதுகுறித்து ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் பொன்னலகரம் டோல்கேட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த சந்தேக நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் மேலக்குப்பத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் விஜயகாந்த்,36; முதனையில் விஜயக்குமார் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டார்.
அதன்பேரில் போலீசார், விஜயகாந்தை கைது செய்து, அவரிடமிருந்து ஆறரை சவரன் நகை மற்றும் 369 கிராம் வெள்ளியை பறிமுதல் செய்தனர்.
