/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீடு புகுந்து நகை திருட்டு : போலீஸ் விசாரணை
/
வீடு புகுந்து நகை திருட்டு : போலீஸ் விசாரணை
ADDED : நவ 13, 2025 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த பத்தரை சவரன் நகைகள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புவனகிரி அருகே உள்ள, ஆதிவராகநல்லுார் மெயின் ரோட்டுத்தெருவைச் சேர்ந்தவர் உதயக்குமார்,68; விவசாயி. இவர், நேற்று வயலுக்கு உரம் வாங்குவதற்காக பணத்தை எடுக்க, பீரோவை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த, பத்தரை சவரன் நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உதயக்குமார் புவனகிரி போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

