தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற போராட்டம்

 கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற போராட்டம்

 கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற போராட்டம்


ADDED : பிப் 17, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லுாரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து, நேற்று காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், வருங்கால வைப்பு நிதி, ஓய்வு பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணிகொடை ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், கடந்த ஒருவாரமாக வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து, காலவரையற்ற போராட்டத்தை துவங்கினர்.

அதில், பல்கலை., மானிய குழு அறிவித்துள்ள ரூ.57.7 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பாதாகைகளை கையில் ஏந்தியபடி, வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us