தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிவராத்திரி வழிபாடு

 சிவராத்திரி வழிபாடு

 சிவராத்திரி வழிபாடு


ADDED : பிப் 17, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் சிவன் கோவில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடந்தது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மேல், முதல்கால பூஜை துவங்கியது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு 2ம் கால பூஜையும், இரவு 1:00 மணிக்கு 3ம் கால பூஜையும், காலை 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை விமர்சையாக நடந்தது. நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் விடிய விடிய தரிசனம் செய்தனர்.

இதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர், ரயில்வே குடியிருப்பு சித்தி விநாயகர் கோவிலில் உள்ள சொக்கநாதர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பரத நாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us