ADDED : ஜன 29, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி:   திட்டக்குடி அருகே ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி, ஒட்டத்தெருவைச் சேர்ந்தவர் காமராஜ், 56; இவர்,  ஆவினங்குடி பஸ் நிறுத்தம் அருகே ஹோட்டல் நடத்தி வந்தார்.
இவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில் மீண்டும் நெஞ்சுவலி அதிகமானதால் மனமுடைந்த அவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

