ADDED : டிச 22, 2024 08:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : சேத்தியாத்தோப்பு அடுத்த சின்னநெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி, 60; இவர், புவனகிரி அருகே குறியாமங்கலத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 17 ம் தேதி மாலை சிதம்பரத்தில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு, நேற்று காலை திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கேட் மற்றும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த இரண்டரை சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.