ADDED : டிச 01, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் மழையின் காரணமாக மரம் விழுந்ததில், குடிசை வீடு இடிந்து சேதமானது.
கடலுார், தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது குடிசை வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரம் நேற்று முன்தினம் பெய்த கன மழை காரணமாக 'திடீரென' வீட்டின் மீது விழுந்தது. இதில், அந்த வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து சேதமானது.
அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்து கடலுார், தேவனாம்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

