/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை, பாலங்கள் உறுதித்தன்மை ஆய்வு
/
சாலை, பாலங்கள் உறுதித்தன்மை ஆய்வு
ADDED : டிச 01, 2025 05:15 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே சாலை மற்றும் பாலங்களில் ஆய்வு பணி நடந்தது.
திருவண்ணாமலை சாத்தனுார் அணையில் இருந்து கடந்தாண்டு அதிகபடியான தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் பெண்ணையாற்றில் வெள்ளம் வந்தது. அப்போது பகண்டையில் உள்ள சொர்ணாவூர் தடுப்பணையில் 200 மீ., தூரம் அடித்து செல்லப்பட்டது.
மேல்பட்டாம்பாக்கம் அருகே கஸ்டம்ஸ் சாலை பாதியளவு வீணாணது. மருதாட்டில் சாலையின் குறுக்கே இருந்த பாலம் சேதமானது.
தற்போது தொடர்ந்து மழை பெய்கிறது. அதனால் சாலைகள் தரமாக உள்ளதா; அழகியநத்தம் பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள பாலம் உறுதியாக உள்ளதா; கஸ்டம் சாலையின் கரைகளை முறையாக பராமரிக்கிறார்களா; என நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஆற்றின் கரைகளை கண்காணிக்க உத்தரவிட்டார். கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார்,கோட்ட பொறியாளர் சிவக்குமார்,உதவி கோட்ட பொறியாளர் சந்தோஷ்குமார், உதவி பொறியாளர் மணிவேல் உடனிருந்தனர்.

