/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீ விபத்தில் வீடு சேதம்; எம்.எல்.ஏ., நிவாரணம்
/
தீ விபத்தில் வீடு சேதம்; எம்.எல்.ஏ., நிவாரணம்
ADDED : ஜன 04, 2025 05:56 AM

விருத்தாசலம்; கம்மாபுரம் அருகே தீ விபத்தில் பாதித்த குடும்பத்துக்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.
கம்மாபுரம் அடுத்த கோ.ஆதனுாரை சேர்ந்த தனபால் என்பவரது கூரை வீடு நேற்று முன்தினம் இரவு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. அதில், வீட்டு உபயோகப் பொருட்கள், துணிகள், அரசு ஆவணங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
தகவலறிந்த மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தனபால் குடும்பத்தினருக்கு அரிசி, வேட்டி, சேலை, ரொக்கம் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார்.
ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் அருளழகன், ஊராட்சி தலைவர் குணசேகரன், முன்னாள் சேர்மன் பாஸ்கரன், சத்யாசெல்வம், முன்னாள் ஊராட்சித் தலைவர் குறிஞ்சிசெல்வம், வி.குமாரமங்கலம் ஊராட்சித் தலைவர் வெங்கடேஸ்வரி செல்வகுமார், முன்னாள் வேளாண் விற்பனை சங்க தலைவர் சேகர், நிர்வாகிகள் சவுந்தர், அண்ணாமலை, சங்கர், அய்யப்பன் உடனிருந்தனர்.