/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனித சங்கிலி போராட்டம் அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
/
மனித சங்கிலி போராட்டம் அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
மனித சங்கிலி போராட்டம் அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
மனித சங்கிலி போராட்டம் அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
ADDED : மார் 14, 2024 06:37 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க.,வினர் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். கடலுாரில் அண்ணா பாலம் அருகில் முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதுபோன்று மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, விருத்தாசலம் , திட்டக்குடி என 20க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடந்தது.
இந்நிலையில், தடையை மீறி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, அ.தி.மு.க., வினர் மீது, அந்தந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.