/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பணியாளர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டம்
/
அரசு பணியாளர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டம்
ADDED : அக் 24, 2024 06:42 AM

கடலுார்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, கடலுாரில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க
வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் என்பது உள்ளிட்ட 12அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
மனிதசங்கிலி போராட்டம் நடந்தது.
கடலுார் தபால் நிலையம் முன்பு நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் சங்க மாவட்ட தலைவர் இருதயராஜ் தலைமை தாங்கினார். மாவட்டசெயலாளர் தேவராஜ் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர்கள் தெய்வசிகாமணி, அல்லமுத்து, துணைசெயலாளர்கள் தமிழ்ச்செல்வன், திருநாவுக்கரசு
முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் ராசாமணி, மாநில துணைத்தலைவர் சேகர், மாநில செயலாளர்
ஞானஜோதி, மாவட்டதலைவர் தங்கராசு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மாவட்ட பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.