
கடலுார் : கடலுார் மாவட்ட காவல் துறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், மனித நேய வார விழா குள்ளஞ்சாவடியில் நடந்தது.
மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி., நாகராஜன் தலைமை தாங்கினார். மனித உரிமைகள் பிரிவு இன்ஸ்பெக்டர் தீபா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் குள்ளஞ்சாவடி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கிராம நிர்வாகிகள், ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
விழாவில் குறிஞ்சிப்பாடி தாசில்தார் சுரேஷ்குமார், வக்கீல் திருமார்மன், அஸ்மா அறக்கட்டளை மவுலவி ராஜ் முகமது உமரிமான்பஈ, கடலுார் அரசு கல்லுாரி பேராசிரியர் ராஜா, மஞ்சக்குப்பம் அரசு பள்ளி ஆசிரியைகள் கவிதாயினி, வெற்றிச்செல்வி ஆகியோர் மனித உரிமைகள், மனித நேயம், மனித பண்புகள் குறித்தும், சாதி மத பேதங்கள் போன்றவைக் குறித்தும் பேசினார்.
நிகழ்ச்சியில் குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, புள்ளியல் ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு, குள்ளஞ்சாவடி போலீசார், கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். சப் இன்ஸ்பெக்டர் பாலசந்தர் நன்றி கூறினார்.