ADDED : மே 22, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: மனைவியை பீர் பாட்டிலால் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்
குள்ளஞ்சாவடி அடுத்த சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்தவர் விஜேந்திரன்,38; இவரது மனைவி ஜோதி, 33; ஜோதியின் மொபைல்போனை விஜேந்திரன் கேட்டுள்ளார்.
அதற்கு ஜோதி தர மறுக்கவே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஜயேந்திரன் பீர் பாட்டிலால் ஜோதியை தாக்கினார்.
காயமடைந்த ஜோதி, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விஜேந்திரனை கைது செய்தனர்.