ADDED : செப் 18, 2026 07:54 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
பு.முட்லுாரைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன்,28; புவனகிரியில் ஒர்க் ஷாப்பில் மெக்கானிககாக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 15ம் தேதிவீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி தேவதர்ஷினி கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, வெற்றிச்செல்வனை, தேடிவருகின்றனர்.
