தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர் தற்கொலை முயற்சி சில்வர் பீச்சில் பரபரப்பு 

மாணவர் தற்கொலை முயற்சி சில்வர் பீச்சில் பரபரப்பு 

மாணவர் தற்கொலை முயற்சி சில்வர் பீச்சில் பரபரப்பு 


ADDED : செப் 18, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார், செப். 19–

கடலுார் சில்வர் பீச்சில் கல்லுாரி மாணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.கடலுார் சில்வர் பீச்சில் நேற்று மாலை 4:00 மணிக்கு வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தார். அவரை, ரோந்து சென்ற போலீசார் விசாரித்தனர். அதில், அவர் கடலுார், வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்பதும், அரசு கல்லுாரியில் 2ம் ஆண்டு பயிலும் அவர், தந்தையுடன் ஏற்பட்ட பிரச்னையில் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. 

உடன், போலீசார், மாணவரை மீட்டு சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us