ADDED : அக் 17, 2026 07:06 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
கம்மாபுரம் அடுத்த கத்தாழை கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியநாதசாமி, 64. நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வேளியே சென்ற இவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி வசந்தா புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து வைத்தியநாதசாமியை தேடி வருகின்றனர்.
