/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதன்மை ஊராட்சியாக மாற்றி காட்டுவேன்: சி.என்.பாளையம் ஊராட்சி தலைவர் உறுதி
/
முதன்மை ஊராட்சியாக மாற்றி காட்டுவேன்: சி.என்.பாளையம் ஊராட்சி தலைவர் உறுதி
முதன்மை ஊராட்சியாக மாற்றி காட்டுவேன்: சி.என்.பாளையம் ஊராட்சி தலைவர் உறுதி
முதன்மை ஊராட்சியாக மாற்றி காட்டுவேன்: சி.என்.பாளையம் ஊராட்சி தலைவர் உறுதி
ADDED : ஜன 27, 2024 06:19 AM

நடுவீரப்பட்டு : 'அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடு கடலுார் ஒன்றியத்திலேயே முதன்மை ஊராட்சியாக மாற்றுவதே எனது லட்சியம்' என சி.என்.பாளையம் ஊராட்சி தலைவர் மங்களம் வேல்முருகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கடலுார் ஒன்றியத்தில் சி.என்பாளையம் பெரிய ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்னையான குடிநீர், தெரு மின்விளக்கு போன்ற வசதி செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
மலையாண்டவர் கோவில் அடிவாரம், புளியந்தோப்பு, கச்சிராயர்குப்பம், புத்திரன்குப்பம், காலனி உள்ளிட்ட பகுதிகளில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், பழுதடைந்துள்ளது. இதனை மாற்றி புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதிய கழிவறை இல்லாததால் மாணவர்கள் இயற்கை உபாதை கழிக்க மலையடிவாரத்திற்கு வருகின்றனர்.
எனவே, மலையாண்டவர் கோவில் அடிவாரத்தில் பொது சுகாதார வளாகம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அருந்ததியர் பகுதியிலிருந்து வரும் மழைநீர் வெளியேற சி.என்.பாளையம் - சாத்திப்பட்டு சாலையில் சிறிய பாலம் கட்ட வேண்டும்.
சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணி நடக்கிறது.
ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், இடையர்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டடம் மற்றும் காலனி, கச்சிராயர்குப்பம் அங்கன்வாடி கட்டடம் பழுது நீக்கம் செய்து, அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.
பட்டீஸ்வரத்தில் திடக்கழிவு மேலாண்மைக் கூடம், மண்புழு உரக்கூடம் கட்டப்பட்டுள்ளது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் பட்டீஸ்வரத்தில் அங்கன்வாடி கட்டடம், செட்டியார்தெரு, இடையர்குப்பம், மழவராயநல்லுார் பகுதிகளில் சிமென்ட் சாலை போடப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடு கடலுார் ஒன்றியத்திலேயே முதன்மை ஊராட்சியாக மாற்றுவதே எனது லட்சியமாக உள்ளது.
இவ்வாறு மங்களம் வேல்முருகன் கூறினார்.

