/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லஞ்சம் வாங்கியிருந்தால் தந்து விடுகிறோம் மக்களுக்கு சாலையை போட்டு தாருங்கள் கவுன்சிலர் மகனின் சமூக வலைதள பதிவால் பரபரப்பு

ADDED : ஜன 08, 2024 05:36 AM

நெல்லிக்குப்பம்: லஞ்சம் வாங்கியிருந்தால் திருப்பி தந்து விடுகிறோம் மக்களுக்கு தேவையான சாலை வசதியை செய்து தருங்கள் என ம.தி.மு.க., கவுன்சிலரின் மகன் சமூக வலைதளங்களில் பேசி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகரில் உள்ள கோவில் இடத்தில் பல ஆண்டுகளாக நகராட்சி துவக்கப்பள்ளி செயல்பட்டது. இதற்காக நகராட்சி மூலம் கோவிலுக்கு வாடகை அளித்து வந்தனர்.இந்நிலையில் அதே பகுதியில் வேறு இடத்தில் நகராட்சி மூலம் பள்ளிக்கு சொந்த கட்டடம் கட்டப்பட்டு பள்ளி அங்கு செயல்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பதால் கோவில் இடத்தில் சமுதாய கூடம் கட்டி தர வேண்டுமென வி.சி., கட்சி எம்.எல்.ஏ., சிந்தனைச்செல்வனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து அந்த இடத்தை எம்.எல்.ஏ.,ஆய்வு செய்தார்.அமைச்சர்களிடம் பேசி சமுதாய கூடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அப்போது அங்கிருந்த இளைஞர்கள் இந்த பகுதியின் ம.தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் லஞ்சம் வாங்கி கொண்டு சாலை போடாமல் மெத்தனம் காட்டுகிறார்.கோவில் திருவிழா நடப்பதற்குள் சாலை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
அதிகாரிகளிடம் பேசி சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ.,உறுதியளித்தார். இந்நிலையில் கவுன்சிலர் ராணியின் பணிக்கு துணையாக பணியாற்றும் அவரது மகன் சங்கர், சமூக வலைதளத்தில், நாங்கள் லஞ்சம் வாங்கவில்லை.
அப்படி வாங்கியதாக மக்கள் நினைத்தால் அதை கூட திருப்பி கொடுத்து விடுகிறோம். மக்களுக்கு தேவையான சாலையை போட்டு தாருங்கள் என சங்கர் பதிவிட்டுள்ளார்.
மக்களுக்கு சேவை செய்யவே எனது தாயார் பதவிக்கு வந்தார்.ஆனால் சூழ்நிலை வேறு மாதிரி உள்ளது.முடிந்தவரை மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருகிறோம் என தன்னிடம் கேட்டவர்களிடம் சங்கர் கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் கவுன்சிலரின் மகன் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.