/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் ரயில் விபத்தில் இறந்த மாணவர்களுக்கு ரூ.5 லட்சமா? அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் சம்பத் கேள்வி

ADDED : ஜூலை 09, 2025 08:53 AM

கடலுார் : கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுக்கும்போது, விபத்தில் இறந்த மாணவர்களுக்கு 5 லட்சம் இழப்பீடா என அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலுார் அடுத்த செம்மங்குப்பம் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, இறந்த மாணவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின் நிருபர்களிடம் கூறியதாவது:
நேற்று காலை பள்ளி வேன் மீது, ரயில் மோதி 3 மாணவ, மாணவியர் பலியாகினர். ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக அறிவித்துள்ளார்.
ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியது ஏன். இதனைப் பார்க்கும்போது இந்த ஆட்சியின் அவலம் தெரிகிறது.
பள்ளி மாணவர்கள், வரும் காலங்களில் கலெக்டர், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பல்வேறு துறையில் சாதனை படைக்கலாம். மேலும் இறந்த மாணவி சாருமதி, பள்ளியளவில் முதல் மதி்ப்பெண் பெற்று வந்துள்ளார்.
இதுபோன்ற சாதனை படைத்து வரும் மாணவர்களின் இறப்புக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்குவது போதாது.
தமிழக அளவில் பள்ளி மாணவர்கள் இதுபோன்ற கோர விபத்தில் இறந்தால் அவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி கிடைப்பதற்கு புதிய சட்டம் இயற்ற வேண்டும். சட்டத்தை திருத்தி உடனடியாக அறிவிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் அந்த பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள டிரைவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். மாணவர்களை ஏற்றிச் செல்லும் டிரைவர்கள் எதிர்காலத்தை காலத்தை கருத்தில் கொண்டு பாதுகாப்பான முறையில் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு சம்பத் கூறினார்.
குமார், காசிநாதன், தெய்வ பக்கிரி, கந்தன் உடனிருந்தனர்.