/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'அறிவை சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்' ஆச்சார்யா தலைவர் அரவிந்தன் பேச்சு

ADDED : அக் 31, 2025 02:41 AM

கடலுார்:  'அறிவை சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்' என, ஆச்சார்யா உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் பேசினார்.
கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டி துவக்க விழாவில் அவர் பேசியதாவது:
மாணவர்கள் தங்கள் எண்ணங்களை உலக தரத்திற்கு எடுத்துச்சென்று வெற்றி பெறுவதற்கு அறிவை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் எண்ணங்கள் நிரம்பிய உலகத்தை உள் உலகத்திற்கும், வெளி உலகத்திற்கும் வெளிப்படுத்த வேண்டும். வெளி உலகத்திலிருந்து வரும் விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் எதிலும் வெற்றி பெற முடியும்.
அறிவை ஞானமாக மாற்றுவதற்கு, பஞ்ச கலா எனும் தத்துவத்தில் உள்ள பிரதிஷ்டா கலா, நிவ்ருத்தி கலா, வித்யா கலா, சாந்தி கலா, சாந்திதீத கலா எனும் ஐந்து நிலைகளை நன்று அறிந்து கொள்ள வேண்டும்.  தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் நமது திறனாய்வு சிந்தனையை இழந்துவிடக்கூடாது. வளர்ந்து வரும் அறிவியலுடன் போட்டி போடும் அளவிற்கு நமது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அறிவைப்பெற்றால் மட்டும் போதாது, அதை சரியான இடத்தில் பயன்படுத்தினால் தான் ஜெயிக்க முடியும்.
இவ்வாறு அரவிந்தன் பேசினார்.