ADDED : அக் 23, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சி ஆண்டிற்கு 50 லட்சம் ரூபாய் வருவாய் கொண்ட பேரூராட்சியாக உள்ளது. இங்கு, பொதுமக்களுக்கு அரசின் நிதி உதவியுடன் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன. ஆனால், பேரூராட்சி வருமானத்தில் மக்களுக்கு செலவு செய்வதை விட, புதியதாக வந்துள்ள பேரூராட்சி செயல் அலுவலர், தனக்கு, 'ஏசி' வசதியுடன், 'ஹைடெக்'ஆக தனது அறையை தயார் செய்து வருகிறார். வந்த 2 மாதத்தில் இப்படியா என, உள்ளாட்சி பிரதிநிதிகள், அங்குள்ள அலுவலர்கள் புலம்பி வருகின்றனர்.
இந்த அலுவலகத்தில், ஏற்கனவே, கம்ப்யூட்டர் அறையில் இருந்த 'ஏசி' சேர்மன் அறைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்குள் கம்யூட்டர் இயந்திரங்கள் பழுதாகி வருகின்றன. அதற்கு எந்த ஏற்பாடும் செய்ய யாரும் முன்வரவில்லை எனவும் குமுறுகின்றனர்.

