/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் ரயில் நிலையத்தில் மேம்படுத்தும் பணிகள் மந்தம்
/
கடலுார் ரயில் நிலையத்தில் மேம்படுத்தும் பணிகள் மந்தம்
கடலுார் ரயில் நிலையத்தில் மேம்படுத்தும் பணிகள் மந்தம்
கடலுார் ரயில் நிலையத்தில் மேம்படுத்தும் பணிகள் மந்தம்
ADDED : டிச 19, 2024 06:49 AM

கடலுார்; கடலுார் ரயில் நிலையத்தில் மேம்படுத்தும் பணிகள் மந்தமாக நடப்பதை துரிதப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலுார் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம், மத்திய அரசின் அமிரித் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் ரூ.6.30 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. நிலைய அலுவலகம் புதுப்பித்தல், வாகன பார்க்கிங் வசதி, பயணிகள் காத்திருப்பு அறை, கழிப்பறை, ரோடு, பூங்கா உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கிய, இப்பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் ஆய்வு செய்த, ரயில்வே மண்டல மேலாளர், பணி துவங்கி ஓராண்டு ஆகியும் ரயில் நிலையத்தில் பணிகள் சரிவர நடக்காததை கண்டு அதிருப்தியடைந்தார். இதனால் ரயில் பயணிகள் பாதிக்கப்படுவதாகவும், 30 நாட்களில் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். ஆனாலும், இப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளாமல் மந்தமாகவே நடந்து வருகிறது. இது ரயில் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

