/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலியில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
நெய்வேலியில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
நெய்வேலியில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
நெய்வேலியில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : நவ 15, 2024 04:31 AM

நெய்வேலி: நெய்வேலி அருகே காடாம்புலியூர், காட்டாண்டிக்குப்பம் மற்றும் குறிஞ்சிப்பாடி சந்தைவெளிபேட்டை சேர்ந்த மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் பாக்கியலட்சுமி தலைமையில், பல்வேறு கட்சியினர் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலையில், தி.மு.க., வில் இணைந்தனர்.
அ.தி.மு.க., அழகேசன், குமார், பா.ம.க., பிரகாஷ், துரை, உதயகுமார், வசந்தா, த.வா.க., பார்த்திபன், மோகனா, விமலாதேவி ராஜேஸ்வரி, ராதிகா உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.
தொடர்ந்து பண்ருட்டி ஒன்றியம் மேட்டுகுப்பம் தே.மு.தி.க., சக்திவேல், உத்திராட்சம், த.வா.க., கனகவேல், பா.ம.க., சந்தோஷ் குமார், ஜெயராமன், அ.தி.மு.க., சாமிதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய அவைத்தலைவர் வீரராமச்சந்திரன், செயலாளர் குணசேகரன், பண்ருட்டி ஒன்றிய பொருளாளர் அய்யப்பன், பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், ஒன்றிய துணை செயலாளர்கள் ஏழுமலை, செல்வக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.