/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தியாகி அஞ்சலை அம்மாள் கார்டன் மனைப்பிரிவு துவக்க விழா
/
தியாகி அஞ்சலை அம்மாள் கார்டன் மனைப்பிரிவு துவக்க விழா
தியாகி அஞ்சலை அம்மாள் கார்டன் மனைப்பிரிவு துவக்க விழா
தியாகி அஞ்சலை அம்மாள் கார்டன் மனைப்பிரிவு துவக்க விழா
ADDED : டிச 08, 2025 05:58 AM

மந்தாரக்குப்பம்: வடலுாரில் ஆர்.கே. குரூப்ஸின் தியாகி அஞ்சலை அம்மாள் கார்டன் புதிய மனைப் பிரிவு துவக்க விழாவில் வாடிக்கையாளர்கள் மனைகளை தேர்வு செய்து முன் பதிவு செய்தனர்.
சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, வடலுார் நகராட்சி, வெங்கடேஸ்வரா மரவாடி அருகில் டி.டி.சி.பி., அப்ரூவல் பெற்ற தியாகி அஞ்சலை அம்மாள் கார்டன் புதிய மனைப்பிரிவு துவக்க விழா நடந்தது. அதில் ஏராளமனோர் கலந்து கொண்டு மனைகளை தேர்வு செய்து முன்பதிவு செய்தனர்.
இது குறித்து, ஆர்.கே. குரூப்ஸ் கண்ணன் மற்றும் சிவக்குமார் கூறியதாவது:
'பிரமிக்கத்தக்க அளவில் மிக நேர்த்தியான அமைப்புடன் அரசு அங்கீகாரம் பெற்ற பசுமை நகரமாம் ஆர்.கே., குரூப்ஸின் தியாகி அஞ்சலை அம்மாள் கார்டன் புதிய மனைப்பிரிவு விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
மனைப்பிரிவு முழுவதும் தார் சாலை, மின்சாரம், உடனே வீடு கட்டி குடியேற ஏற்ற மனைப்பிரிவு, நகரில் அருகிலேயே பைபாஸ் சாலை, அற்புத நுழைவு வாயில், குடிநீர் இணைப்பு, தெரு விளக்கு, பூங்கா உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் உள்ள மனை பிரிவு அமைந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதில் மணிவண்ணன், ராஜபூபதி, ஆறுமுகம், துரைநாகராஜன், வினோத், சிங்காரவேல், சந்திரசேகரன், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

