ADDED : டிச 08, 2025 05:59 AM

கடலுார்: கடலுார் தொன் குவனெல்லா மாணவர் இல்லத்தில் 13வது ஆண்டு உலக மாற்றுத்திறனாளிகள் தின விழ நடந்தது.
அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசுகையில், 'தமிழக முதல்வர் ஸ்டாலின், மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வியில் முன்னேறவும், விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இத்திட்டங்களை மாற்றுத் திறனாளிகள் மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்' என்றார்.
கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, அவர்கள் இருவரும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசு வழங்கினர்.
டாக்டர் ராஜதேவி சட்டநாதன், எஸ்.கே.வித்யா மந்திர் பள்ளி நிர்வாக இயக்குனர் கவிதா கண்ணன், கே.டி.ஆர். பஸ் உரிமையாளர் சத்தியநாராயணன், புனித கார்மேல் அன்னை ஆலய பங்குதந்தை வின்சென்ட், ஆரோக்கியராஜ் விமல் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஜான்தாஸ் நன்றி கூறினார்.

