/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் 68 பேர் கைது
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் 68 பேர் கைது
தடையை மீறி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் 68 பேர் கைது
தடையை மீறி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் 68 பேர் கைது
ADDED : டிச 08, 2025 05:59 AM

கடலுார்: கடலுாரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 68 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோர்ட் உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசையும், காவல் துறையையும் கண்டிப்பதாக கூறி கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணியினர் நேற்று மாலை திரண்டதால் பரபரப்பு நிலவியது.
இதற்கு புதுநகர் போலீசார் தடை விதித்தனர். இருப்பினும், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன் தலைமையில், மாநில செயலாளர் சனில்குமார், மாவட்ட துணைத்தலைவர் கார்த்தி, மாவட்ட செயலாளர்கள் வெங்கடேசன், சரவணன், ரவிச்சந்திரன், பெருமாள், செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, பொறுப்பாளர் வேல்முருகன் உட்பட பலர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அதனைத்தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது, தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, 3 பெண்கள் உட்பட 68 பேரை போலீசார் கைது செய்தனர்.

