/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விழிப்புணர்வு மினி மாரத்தான் கலெக்டர் துவக்கி வைப்பு
/
விழிப்புணர்வு மினி மாரத்தான் கலெக்டர் துவக்கி வைப்பு
விழிப்புணர்வு மினி மாரத்தான் கலெக்டர் துவக்கி வைப்பு
விழிப்புணர்வு மினி மாரத்தான் கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : அக் 10, 2024 03:53 AM

கடலுார்: பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட விழிப்புணர்வு மினி மாரத்தான் கடலுாரில் நடந்தது.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை முன்னேற்றும் வகையில் பெண் குழந்தைகளை காப்போம்,
பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை ஊக்குவிக்கவும், குழந்தைகளுக்கு
எதிரான பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்தவும், பெண் குழந்தைகள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கடலுாரில் விழிப்புணர்வு மினி மாரத்தான் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்தார். மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். கடலுார் மாநகராட்சி பள்ளியில் துவங்கிய மினி மாரத்தான் கடற்கரை பாலத்தில் முடிந்தது. ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாநகராட்சி மண்டல குழு தலைவர் பிரசன்னா, மாநகராட்சி கவுன்சிலர் சுபாஷினி ராஜா, மாவட்ட சமூகநல அலுவலர் சித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.