/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாநகராட்சியில் அறிவுசார் மையம் திறப்பு
/
கடலுார் மாநகராட்சியில் அறிவுசார் மையம் திறப்பு
ADDED : ஜன 06, 2024 05:16 AM

கடலுார் : கடலுார் மாநகராட்சியில் நுாலகத்துடன் கூடிய அறிவுசார் மையத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.
கடலுார் மாநகராட்சியில் நகர்ப்புற திட்டத்தின் கீழ் 1.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நுாலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மையத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதையடுத்து, அறிவுசார் மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கமிஷனர் காந்திராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
மாநகராட்சி பொறியாளர் குருசாமி, மாநகர நல அலுவலர் எழில் மதனா, கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், தி.மு.க., மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.