/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ம.க., சார்பில் மருத்துவ முகாம் தங்கர்பச்சான் துவக்கி வைப்பு
/
பா.ம.க., சார்பில் மருத்துவ முகாம் தங்கர்பச்சான் துவக்கி வைப்பு
பா.ம.க., சார்பில் மருத்துவ முகாம் தங்கர்பச்சான் துவக்கி வைப்பு
பா.ம.க., சார்பில் மருத்துவ முகாம் தங்கர்பச்சான் துவக்கி வைப்பு
ADDED : அக் 07, 2024 07:06 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த நல்லுார்பாளையம் கிராமத்தில் பா.ம.க., தலைவர் அன்புமணி பிறந்த நாள் விழா முன்னிட்டு இலவச மருத்துவமுகாம் நடந்தது.
பண்ருட்டி வட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம், நல்லுார்பாளையம் கிராமத்தில் பா.ம.க.தலைவர் அன்புமணி பிறந்தநாள் விழா முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
முகாமிற்கு டாக்டர் கவுரிசங்கர் தலைமையில் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
முகாமினை திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஜெகன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் முன்னிலை வகித்தனர்.
முகாமில் 963 நோயாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதில் நீரழிவு நோய், ரத்த அழுத்தம், முட்டுவலி, கால்பாத சிகிச்சை, இ.சி.ஜி., ரத்த பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.