/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் பல்கலையில் இசை விழா துவக்கம்
/
சிதம்பரம் பல்கலையில் இசை விழா துவக்கம்
ADDED : பிப் 15, 2024 06:48 AM

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இசைத்துறையில் 5 நாட்கள் இசை விழா துவங்கியது.
ராணி சீதை அரங்கில் துவங்கிய விழாவை துணைவேந்தர் கதிரேசன் துவக்கி வைத்து பேசினார். விழாவில் இசைக்கலைஞர்கள் பாண்டியன், சேதுராம், மணி, இசைமாமுரசு ரவிக்குமார் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
பல்கலை., நுண்கலை புலமுதல்வர் அருட்செல்வி வரவேற்றார். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் சுதர்சன், தொலைதூரக் கல்வி இயக்குனர் சீனிவாசன், கல்லூரி கல்விகுழு புல முதன்மையர் கோதைநாயகி, துணைவேந்தரின் நேர்முக செயலர் பாக்கியராஜ், பி.ஆர்.ஓ., ரத்தின சம்பத், நெறிமுறை அதிகாரி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இசைத்துறை தலைவர் குமார் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிகளை பிரதீபா தொகுத்து வழங்கினார்.

