/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் புதிய கட்டடம் திறப்பு
/
ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் புதிய கட்டடம் திறப்பு
ADDED : மார் 20, 2024 02:27 AM

கடலுார் : ஆல்பேட்டை செக்போஸ்டில் நவீன கேமிராக்கள், பாதுகாப்பு கருவிகள் வைக்கும் புதிய கட்டடத்தை எஸ்.பி., ராஜாராம் திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில், தனியார் நிறுவன உதவியுடன் ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் ரூ.13 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. டி.எஸ்.பி., பிரபு தலைமை தாங்கினார். எஸ்.பி., ராஜாராம் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
அந்த கட்டடத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு கருவிகள் வைக்கப்பட்டு, கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
. நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, ஸ்ரீபிரியா, முத்துக்குமரன், எஸ்.ஐ.,கள் கதிரவன், மகாலிங்கம், ராமச்சந்திரன் மற்றும் போலீசார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

