/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு
/
புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு
ADDED : ஜன 03, 2024 06:26 AM

நெய்வேலி : நெய்வேலி தொகுதியில் புதிய வகுப்பறை கட்டடங்களை, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
நெய்வேலி அடுத்துள்ள பெரியக்கோவில்குப்பம் கிராமத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 21 லட்சம் செலவில் இரண்டு வகுப்பறை கட்டடம், பாச்சாரப்பாளையம் கிராமத்தில் ரூ. 11 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டடம், ரூ. 20 லட்சம் செலவில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டன.
திறப்பு விழாவில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பங்கேற்று, திறந்து வைத்தார்.
குறிஞ்சிப்பாடி பி.டி.ஓ.க்கள்., சிவஞானசுந்தரம், ராமச்சந்திரன், வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி லட்சுமி, விமல் ராஜ், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய இன்ஜினியர் தமிமூனிசா, குழந்தைகள் நல அலுவலர் புவனேஸ்வரி, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் வீர ராமச்சந்திரன், செயலாளர் குணசேகரன்,பொருளாளர் ஆனந்த ஜோதி, கீழூர் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் மோகன், முன்னாள் ஊராட்சி தலைவர் அருள் முருகன், வடக்குத்து ஊராட்சி துணைத் தலைவர் சடையப்பன் உடனிருந்தனர்.