/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லட்சுமி சோரடியா பள்ளியில் என்.எஸ்.எஸ்., துவக்கம்
/
லட்சுமி சோரடியா பள்ளியில் என்.எஸ்.எஸ்., துவக்கம்
ADDED : ஜூலை 27, 2024 02:58 AM

கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான நாட்டு நலப்பணித் திட்டம் துவக்க விழா நடந்தது.
பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் திருமுகம், நாட்டு நலப்பணித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், ஆங்கிலத்தில் உரையாடுவதின் அவசியம் குறித்தும் பேசினார்.
டாக்டர் அருண் வர்கீஸ், பற்களை பாதுகாப்பது குறித்து பேசினார். தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா, உதவி தலைமை ஆசிரியர் பத்தாகான் வாழ்த்திப் பேசினர். விழாவில், கடந்த கல்வியாண்டில் நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தியாகு நன்றி கூறினார்.