/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மணவாளநல்லுாரில் பள்ளி கட்டடம் திறப்பு
/
மணவாளநல்லுாரில் பள்ளி கட்டடம் திறப்பு
ADDED : பிப் 19, 2024 05:40 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கிராம பள்ளியில், ரூ.31 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.
புதிய பள்ளி கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதில், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஊராட்சி தலைவர் நீதிராஜன், பி.டி.ஓ., ராதிகா, பொறியாளர் ருக்குமணி, பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி, ஒன்றிய துணை செயலாளர் மணிவேல், ஊராட்சி துணைத் தலைவர் அஞ்சலை தேவி, காங்., கட்சி மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ஜெயகுரு மற்றும் ஆசிரியர்கள், தி.மு.க., காங்., நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
இதேபோல், உச்சிமேடு கிராமத்தில் உள்ள அரசு துவக்க பள்ளியில் ரூ.31 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டடம் திறக்கப்பட்டது.

