ADDED : பிப் 18, 2024 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.
புவனகிரி அரசு மாதிரி மகளிர் மேல் நிலைப்பள்ளியில், மாவட்ட கனிமவள அறக்கட்டளை சார்பில் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழாவில் முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். புவனகிரி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை சரவணஜான்சிராணி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி வழக்கறிஞர் குணசேகரன் புதிய வகுப்பறை கட்டடத்தை குத்து விளக்கு ஏற்றி வைத்தார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
துணை தலைமை ஆசிரியர் செந்தில் வடிவு நன்றி கூறினார்.