/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாமலை பல்கலையில் பயிற்சி பட்டறை துவக்க விழா
/
அண்ணாமலை பல்கலையில் பயிற்சி பட்டறை துவக்க விழா
ADDED : ஜன 23, 2024 10:27 PM
சிதம்பரம் : நுண்தேர்வு மற்றும் மதிப்பீடு தமிழில் வினா உரு குறித்த 6 நாள் பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மொழியியல் உயராய்வு மையம் மற்றும் மைசூர் இந்திய தேசிய தேர்வுப்பணி சார்பில் 'நுண் தேர்வு மற்றும் மதிப்பீடு தமிழில் வினா உரு தயாரித்தல்' குறித்த 6 நாள் பயிற்சிப் பட்டறை துவக்க விழா நடந்தது. தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ் தலைமை தாங்கினார்.
மொழியியல் உயராய்வு மைய இக்குனர் சரண்யா வரவேற்றார். இந்திய மொழிகளின், நடுவண் நிறுவன உதவி இயக்குனர் பங்கஜ் திவவேதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். இந்திய மொழிப்புல முதல்வர் பாரி பயிற்சி பட்டறையை துவக்கி வைத்தார்.
இதில், பேராசிரியர்கள் துரை, சந்திரமோகன், குமரேசன், லலிதாராஜா, குப்புசாமி, தெய்வசிகா மணி, அம்பேத்கர் இருக்கை சவுந்தரராஜன், ராதிகா ராணி மற்றும் பலர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள், உறுப்பு கல்லுாரிகளின் உதவிப் பேராசிரியர்கள், பல்கலைக் கழக ஆய்வு மாணவர்கள் பங்கேற்றனர். சகுந்தலா நன்றி கூறினார்.

