/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் துறைமுகத்தில் மீன்கள் வரத்து அதிகரிப்பு
/
கடலுார் துறைமுகத்தில் மீன்கள் வரத்து அதிகரிப்பு
ADDED : டிச 16, 2024 07:23 AM

கடலுார்; கடலுார் துறைமுகத்தில் நேற்று மீன்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
கடலுார் துறைமுகத்தில் இருந்து சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக் கோரி, தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட பல்வேறு கிராம மீனவர்கள், விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இவ்வாறு பிடித்து வரும் மீன்களை கடலுார் துறைமுகத்தில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமையான நேற்று கடலுார் துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் குவிந்தனர்.
நேற்று ஒரு கிலோ வஞ்சிரம் 800 ரூபாய்க்கும், சங்கரா 400, பாறை, நெத்திலி, கனவா மீன்கள் தலா 250, பெரிய இறால் 700, சிறிய இறால் 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.