/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையோர ஆக்கிரமிப்பு அதிகரிப்பு; பரங்கிப்பேட்டையில் நெரிசல்
/
சாலையோர ஆக்கிரமிப்பு அதிகரிப்பு; பரங்கிப்பேட்டையில் நெரிசல்
சாலையோர ஆக்கிரமிப்பு அதிகரிப்பு; பரங்கிப்பேட்டையில் நெரிசல்
சாலையோர ஆக்கிரமிப்பு அதிகரிப்பு; பரங்கிப்பேட்டையில் நெரிசல்
ADDED : நவ 18, 2024 07:54 PM

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
பரங்கிப்பேட்டை ரயிலடியில் இருந்து சின்னக்கடை வரை நெடுஞ்சாலைத்துறை சாலை உள்ளது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகிறது.
சமீபகாலமாக, சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, கீரைக்கார தெரு, சஞ்சிவிராயர் கோவில் தெரு, சின்னக்கடை தெரு உள்ளிட்ட இடங்களில், சாலையோர ஆக்கிரமிப்புகளால் எதிர், எதிரே இரு வாகனங்கள் வரும்போது, ஒதுங்கி செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும், பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து சஞ்சிவிராயர் கோவில் தெருவில், வங்கிகள் மற்றும் வியாபார கடைகளுக்கு செல்லுபவர்கள், பைக்குகளை போக்குவரத்திற்கு இடையூராக சாலையோரங்களில் இரு பக்கமும் பைக்குகள் நிறுத்தப்படுவதால், தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவியர் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, பரங்கிப்பேட்டை ரயிலடியில் இருந்து சின்னக்கடை வரை, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.