/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாகனங்கள் திருட்டு அதிகரிப்பு காட்டுமன்னார்கோவிலில் அச்சம்
/
வாகனங்கள் திருட்டு அதிகரிப்பு காட்டுமன்னார்கோவிலில் அச்சம்
வாகனங்கள் திருட்டு அதிகரிப்பு காட்டுமன்னார்கோவிலில் அச்சம்
வாகனங்கள் திருட்டு அதிகரிப்பு காட்டுமன்னார்கோவிலில் அச்சம்
ADDED : ஜூலை 28, 2025 02:00 AM
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் தொடர் வாகனங்கள் திருட்டால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவிலை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த 6 மாதங்களாகவே, தொடர்ந்து வாகனங்கள் திருட்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை எதிரில் நிறுத்தப்பட்டிருந்த பைக், மா.கொளக்குடி சந்தையில் நிறுத்தப்பட்ட பைக் திருடு போனது.
பெரியார் நகரில் இதுவரை 3க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடு போனது. நேற்று முன்தினம் , பெரியார் நகரை சேர்ந்த சீனிவாசன்,45; என்பவர் வீட்டின் முன் நிறுத்திய பைக்கை காணவில்லை. இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசில் அவர் புகார் அளித்தார். இதற்கிடையே, காட்டுமன்னார்கோவில்-சிதம்பரம் பைபாஸ் சாலையில், பைக் ஒன்று நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, சீனிவாசனின் பைக் என்பது தெரிந்தது. விசாரணையில், பைக் திருடிச் சென்றவர் பெட்ரோல் இல்லாததால் அங்கேயே நிறுத்தி விட்டு சென்றதும் தெரிந்தது. பைக் போலீசார் மீட்டு, சீனிவாசனிட் ஒப்படைத்தனர்.
போலீசார் சரியான முறையில் ரோந்து பணியில் ஈடுபடாதது உள்ளிட்ட காரணங்களால் தொடர் திருட்டு நடப்பதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இனியாவது போலீசார், ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.