
கடலுார் : கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது.
தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பாலசந்தர் தேசிய கொடியேற்றினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நகை மதிப்பீட்டாளர் ஆறுமுகம், ஓய்வுபெற்ற ஊரகவளர்ச்சித் துறை அலுவலர் ராமானுஜம் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா, உதவி தலைமை ஆசிரியர் பத்தாகான் உடனிருந்தனர் . ஹிந்தி ஆசிரியை விஜயலட்சுமி, மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரைப்போட்டி நடத்தினார். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியை பேபி, அலுவலர்கள் ஹரிப்ரியா, கிருத்திகா, சிவப்பிரியா செய்திருந்தனர்.
விருத்தாசலம் மணலுார் விருதை வித்யாலயா பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலர் மதியழகன், பொருளாளர் அருள்குமார் முன்னிலை வகித்தனர். தலைமை ஆ சிரியர் கமலீஸ்வரி வரவேற்றார். போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.