/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிடாரி அம்மன் கோவில் குளம் துார்வார கோரிக்கை
/
பிடாரி அம்மன் கோவில் குளம் துார்வார கோரிக்கை
ADDED : ஆக 18, 2025 06:17 AM

நடுவீரப்பட்டு: சன்னியாசிப்பேட்டை பிடாரி அம்மன் கோவில் குளம் துார்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்ருட்டி அடுத்த சன்னி யாசிப்பேட்டை ஊராட்சி யில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் குளம் உள்ளது. தற்போது இந்த குளத்தில் முழுமையாக அதிகளவில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.
இதனால், தண்ணீர் தேங்கி நிற்க முடியாத நிலை ஏற்படுகிறது. குளத்தில் தண்ணீர் இல்லாததால் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள், தண்ணீர் இல்லா மல் அவதியடைந்து வருகின்றன. எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் குளத்தை துார்வாரி மழைநீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.