/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் பகுதியில் சுதந்திர தின விழா
/
கடலுார் பகுதியில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2025 03:17 AM

கடலுார்:கடலுார் பகுதி கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா நடந்தது.
பூண்டியாங்குப்பம் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியில், டி.எம்.எல்.டி.,பிரிவு மாணவ, மாணவியர்கள் மற்றும் கடலுார் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து ரத்த தான முகாம் நடத்தினர்.
சுதந்திர தினத்தையொட்டி நடந்த முகாமை டாக்டர் ஸ்ரீதரன், மகாலட்சுமி கல்விக்குழுமத் தலைவர் ரவி, கல்லுாரி தாளாளர் தேவகி, துணைத் தலைவர் ராக்கவ் தினேஷ் துவக்கி வைத்தனர். முகாமில் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், 22 ஆசிரியர்கள் ரத்த தானம் வழங்கினர்.
ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் இளவரசன், கல்லுாரி மேலாளர் விஜயகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் ஆஷ்லி செய்திருந்தனர்.
முள்ளோடை ஹயகிரிவர் பப்ளிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் டி.வி.ஆர்., கல்வியியல் கல்லுாரியில் தாளாளர் ரங்கமணி, மாணவர்களின் அணிவகுப்பை ஏற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பவானி அம்மாள் கல்வி அறக்கட்டளை இயக்குனர் சித்ரா ராஜேஸ்வரி, சுதந்திரப்போராட்ட வீரர்களின் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார். பள்ளி முதல்வர் அலெக்சாண்டர் சேவியர் வாழ்த்திப் பேசினார்.
கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் பள்ளியின் தலைவர் சிவகுமார், தேசிய கொடியேற்றினார். பள்ளி முதல்வர் மதுரபிரசாத் பாண்டே, துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பண்ருட்டி ரத்னா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி தேசிய கொடியேற்றினார். பள்ளி முதல்வர் ரவி பேசினார். பிளஸ் 2 தேர்வில் 600க்கு 587 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த மாணவர் சாருகேஷிற்கு மடிக்கணினி வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.