ADDED : அக் 26, 2024 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடியில் இந்திய கம்யூ., மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விவசாய சங்க கிளை செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., நிர்வாகக்குழு உறுப்பினர் சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் உலகநாதன், முருகையன், மாதர் சங்க மாவட்ட தலைவர் அம்பிகா, வட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் செல்வராசு வரவேற்றார். கிளை செயலாளர்கள் குமார், தேவதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், திட்டக்குடி அடுத்த போத்திரமங்கலம் ஊராட்சியில் ஏரி வெட்ட துணைபோகும் வருவாய், பொதுப்பணித்துறை, ஊராட்சி நிர்வாகத்தை கண்டிப்பது. வேறு இடத்தில் குளம் வெட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.