/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இந்திய மாதர் சம்மேளன வட்ட பேரவை கூட்டம்
/
இந்திய மாதர் சம்மேளன வட்ட பேரவை கூட்டம்
ADDED : ஜூலை 24, 2025 09:51 PM
திட்டக்குடி; திட்டக்குடியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் வட்ட பேரவை கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் அம்பிகா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், முருகையன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
திட்டக்குடி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பல், எலும்பு, தோல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதிகள் உடனே ஏற்படுத்த வேண்டும். நாட்டுப்புற கலைஞர்கள், கோலாட்ட கலைஞர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. அதில், வட்டத் தலைவராக மூக்காயி, வட்ட செயலாளராக மாரியம்மாள், பொருளாளராக சின்னப்பொண்ணு, வட்ட துணைத் தலைவர்களாக பைரவி, ராணி, துணை செயலாளர்களாக வளர்மதி, நீலாவதி தேர்வு செய்யப்பட்டனர்.