
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு தினத்தை முன்னிட்டு, புவனகிரியில் அவரது படத்திற்கு காங்., கட்சியின் சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட துணைத்தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம் வரவேற்றார்.
மாநில ஆலோசகர் செல்வகுமார், வட்டார தலைவர் லட்சுமணன், தொகுதி செய்தி தொடர்பாளர் சம்பத், நகர தலைவர் மாசிலாமணி. நகர செயலாளர்கள் மனோகர், ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்ததினர் மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன் இந்திரா படத்திற்கும், காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கினார்.
நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உதயக்குமார், சுதர்சனன், அரசன் அம்பேத் உட்பட பலர் பங்கேற்றனர்.

