/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராகவேந்திரா கல்லுாரியில் தொழில் மயமாக்கல் கருத்தரங்கம்
/
ராகவேந்திரா கல்லுாரியில் தொழில் மயமாக்கல் கருத்தரங்கம்
ராகவேந்திரா கல்லுாரியில் தொழில் மயமாக்கல் கருத்தரங்கம்
ராகவேந்திரா கல்லுாரியில் தொழில் மயமாக்கல் கருத்தரங்கம்
ADDED : அக் 14, 2025 07:20 AM

சிதம்பரம்; சிதம்பரம் ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மக்கள் கல்வித் திட்டத்தின் கீழ் கிராமப்புற தொழில் மயமாக்கல் குறித்த கருத்தரங்கு நடந்தது.
சென்னை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றும் ராகவேந்திரா கல்லுாரி சார்பில் மக்கள் கல்வித் திட்ட கருத்தரங்கு நடந்தது.
இரண்டு நாள் விழாவில், வளரும் தொழில்முனைவோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சமூக வளர்ச்சியில் தொழில்முனைவோரின் பங்கு மற்றும் தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்கள் என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் பாபு தலைமை தாங்கினார். முதல்வர் மாலதி வரவேற்றார். மாநில இயக்குநர் (பொறுப்பு) சுரேஷ் துவக்கி வைத்தார்.
பெங்களூர் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய துணை தலைமை நிர்வாக அதிகாரி ரெட்டி, மாநில துணை இயக்குநர் வாசிராஜன், உதவி இயக்குநர் சையத் கலீமுல்லா, சென்னை கே.வி.ஐ.சி., நிர்வாகி இளங்கோவன், கடலூர் சி.கே., கல்லுாரி மேலாண்மை துறை பேராசிரியர் பிரகாஷ், அண்ணாமலை பல்கலைகழக பேராசிரியர் சக்திவேல் உள்ளிட்டோர் பேசினர்.