/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கழுதுாரில் மேம்பாலம் கட்ட அமைச்சரிடம் கோரிக்கை மனு
/
கழுதுாரில் மேம்பாலம் கட்ட அமைச்சரிடம் கோரிக்கை மனு
கழுதுாரில் மேம்பாலம் கட்ட அமைச்சரிடம் கோரிக்கை மனு
கழுதுாரில் மேம்பாலம் கட்ட அமைச்சரிடம் கோரிக்கை மனு
ADDED : அக் 14, 2025 07:19 AM

சிறுபாக்கம்; வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மேம்பாலம் கட்ட கோரி, அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அடுத்த கழுதூர் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது, அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடக்கின்றது.
இதனால், அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மேம்பாலம் கட்டிதர வேண்டுமென அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக கழுதூரில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மேம்பாலம் கட்டிதர கோரி அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதனையறிந்த அமைச்சர் கணேசன், நேற்று அப்பகுதி கிராம மக்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில், கழுதூரில் அதிகளவில் விபத்துகள் நடப்பதை தடுக்க தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டுமென, அனைத்து கட்சி நிர்வாகிகள், கிராம மக்கள் சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டு, மேம்பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். ஆலோசனை கூட்டத்தில் மங்களூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், மங்களூர் பா.ம.க., ஒன்றிய செயலர் கோபி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வி ராஜரத்தினம், முன்னாள் ஊராட்சி தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.