/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சமுதாய கூடம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
/
சமுதாய கூடம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : அக் 14, 2025 07:18 AM
கடலுார்; கடலுார், தேவனாம்பட்டிணம் முத்தலாம்மன் கோவில் வளாகத்தில் சமுதாய கூடம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடலுார், தேவனாம்பட்டிணம் முத்தலாம்மன் கோவில் வளாகத்தில் மாநகராட்சி சார்பில் சமுதாய கூடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் சமுதாய கூடம் கட்டினால், விசேஷ நாட்களில் இடையூறு ஏற்படும் எனக் கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், சமுதாய நலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவலறிந்த வி.ஏ.ஓ., அனுராதா, சம்பவ இடத்திற்கு சென்று, வருவாய்த்துறைக்கு சொந்தமான கோவில் வளாகத்தில் கலெக்டரிடம் அனுமதி பெற்ற பிறகே சமுதாய கூடம் கட்ட முடியும் என, அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.