/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்வி பணியில் புதுமை கலைமகள் பள்ளி முதன்மை
/
கல்வி பணியில் புதுமை கலைமகள் பள்ளி முதன்மை
ADDED : செப் 30, 2025 11:57 PM

மாறி வரும் உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப கல்வி பணியில் புதுமை புகுத்தப்பட்டு வருகிறது என, காட்டுமன்னார்கோவில் கலைமகள் பள்ளி நிறுவனர் முத்துக்குமரன் கூறினார்.
இதுகுறித்து அவர், மேலும் கூறியதாவது:
கடந்த 1981ம் கல்வியாண்டில் ஆரம்ப கல்வி பணியை கலை மகள் கல்வி குழுமம் தோற்றுவித்தது. மாணவர்கள், பள்ளி பருவத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு கல்விப் பணியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளிப் பருவத்திலேயே எதிர்கால வாழ்விற்கு தேவையான சிந்தனைகளை வளர்த்து மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தை மாணவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். வளர்ந்து வரும் உலகில், மாறி வரும் உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப இப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தலில் புதுமை புகுத்த வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் டிஜிட்டல் வகுப்பறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
நான்காம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க உள்விளையாட்டு அரங்கம், உயர்கல்வி பயில வழிகாட்டுதல் நிகழ்ச்சி என பல்நோக்கு திட்டங்களை செயலாற்றி வருகிறோம். 2024-25ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.